சேலத்தில் வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு; 3 பேர் கைது
சேலத்தில் வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் நேற்று முன்தினம் எருமாபாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் விஜயிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,700-யை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விஜயை மிரட்டி பணம் பறித்தது எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த சாரதி (25), மணிகண்டன் (24), காதர் உசேன் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரகள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம், 3 கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story