மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
அசானி புயல் காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வள்ளியூர்:
தமிழகத்தில் அசானி புயல் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகுகள் அனைத்தும் கடற்கரையில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story