சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள எறையசமுத்திரம் கிராமத்தில் இருந்து அய்யலூர் கிராமம் வரை செல்வதற்கு தார் சாலை உள்ளது. இந்த சாலையை அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பெரம்பலூர் சென்று வருவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த சாலையின் இருபுறங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, அதன் கிளைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. சாலையோரமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் எதிரே வாகனங்கள் வந்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் கிளைகளில் உள்ள முட்கள் வாகன ஓட்டிகளின் கைகளை பதம்பார்க்கின்றன. முட்களால் இருசக்கர வாகன டயர்கள் பஞ்சராகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எறையசமுத்திரம்-அய்யலூர் சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story