கோஷ்டி மோதல் தொடர்பாக 30 பேர் மீது வழக்கு


கோஷ்டி மோதல் தொடர்பாக 30 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 May 2022 3:35 AM IST (Updated: 14 May 2022 3:35 AM IST)
t-max-icont-min-icon

கோஷ்டி மோதல் தொடர்பாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன், ரமேஷ். உறவினர்களான இவர்களுக்குள் அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின்போது இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேலும் மோதல் ஏற்படாமல் அன்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார், தலா 15 பேர் வீதம் இரு தரப்பிலும் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று 5 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story