கருமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்


கருமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 14 May 2022 3:35 AM IST (Updated: 14 May 2022 3:35 AM IST)
t-max-icont-min-icon

கருமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ஒரத்தூர் கிராமத்தில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத 7-ம் ஆண்டு பால்குட திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 12-ந் தேதி பால்குட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நேற்று மாலையில் மேலேரி கரையில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து கருமாரி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் கருமாரி அம்மன் வீதி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story