விமானத்தில் அழகிகளை அழைத்து வந்து சென்னை நட்சத்திர ஓட்டலில் விபசாரம் - ஒடிசா மாநில தரகர்கள் கைது
விமானத்தில் அழகிகளை அழைத்து வந்து சென்னை நட்சத்திர ஓட்டலில் விபசாரம் செய்த ஒடிசா மாநில தரகர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
வெளிமாநிலங்களில் இருந்து அழகிகளை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து, நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து உல்லாசத்துக்கு பயன்படுத்தி, பெரிய அளவில் விபசார தொழில் நடப்பதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தரகர்கள் ராகுல் (வயது 30), கிருஷ்ணசந்திரா (27) ஆகியோர் இந்த விபசார தொழிலை ஆன்லைன் வாயிலாக செய்து வருவதாகவும் தெரியவந்தது. இந்த விபசார தரகர்களை கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார்.
விபசார தடுப்பு போலீஸ் உதவி கமிஷனர் துரை மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விபசார தரகர்கள் ராகுல், கிருஷ்ணசந்திரா இருவரும் நேற்று முன்தினம் சென்னை வந்த போது, தனிப்படை போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக போலீசார் இவர்களை தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story