போலீஸ்காரரை தாக்கிய வாலிபருக்கு 4 ஆண்டு சிறை


படம்
x
படம்
தினத்தந்தி 14 May 2022 5:37 PM IST (Updated: 14 May 2022 5:37 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரை தாக்கிய வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மும்பை,
போலீஸ்காரரை தாக்கிய வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
 தாக்குதல்
மும்பை சயான் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் கல்பேஷ் மோகுல். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் சயான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது ஏ.டி.எம். மையம் அருகே 2 பேர் சண்டை போட்டு இருந்ததை கண்டார். உடனே அவர்களை பிடித்து விசாரித்து சண்டையை விலக்க முயன்றார். இடைவெளியில் வந்த போலீஸ்காரரை 2 பேரும் சேர்ந்து தாக்கினர். 
 இதனால் தலையில் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் போலீஸ்காரர் கல்பேஷ் மோகுலை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவரின் காதுகேட்கும் திறன் மந்தமானது.
 4 ஆண்டு சிறை
போலீஸ்காரரை தாக்கிய 2 பேரை பிடித்து கைது செய்து விசாரித்தனர். இதில் செம்பூரை சேர்ந்த அனில் குலாப் (வயது36) மற்றும் மகேஷ் மாரிமுத்து என்பது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மகேஷ் மாரிமுத்து உயிரிழந்தார். 
 இதனால் வழக்கில் தொடர்புடைய அனில் குலாப் மீதான இறுதி கட்ட விசாரணையின் போது குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story