ரூ.11.53 லட்சத்துடன் தலைமறைவான கார் டிரைவருக்கு வலைவீச்சு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 14 May 2022 6:13 PM IST (Updated: 14 May 2022 6:13 PM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபர் நண்பரிடம் இருந்து ரூ.11.53 லட்சத்துடன் தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை, 
தொழில் அதிபர் நண்பரிடம் இருந்து ரூ.11.53 லட்சத்துடன் தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 ரூ.11.53 லட்சம்
மும்பை ஜூகு பகுதியை சேர்ந்த 71 வயது தொழில் அதிபரிடம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சாம்சுல் ஹக் என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டாக திறம்பட வேலை செய்து வந்ததால் தொழிலதிபரின் நம்பிக்கையை அவர் பெற்றிருந்தார்.
 இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி தொழிலதிபர் பாண்டுப்பில் வசித்து வரும் நண்பரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 53 ஆயிரம் வாங்கி வரும்படி தெரிவித்தார். அவருடன் மற்றொரு ஊழியரை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.
கார் டிரைவருக்கு வலைவீச்சு
ஆனால் டிரைவர் சாம்சூல் ஹக் தனியாக சென்று பணத்தை வாங்கி வருவதாக தெரிவித்தார். 
இதையடுத்து பாண்டுப் சென்ற டிரைவர் சாம்சூல் ஹக் தொழிலதிபரின் நண்பரிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு சென்றார். இதன்பின் அவர் காணாமல் போய் விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த தொழிலதிபர் போலீசில் புகார் அளித்தார்.
 இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்துடன் அபேஸ் ஆன டிரைவரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story