ரேஷன் கடை திறப்பு


ரேஷன் கடை திறப்பு
x
தினத்தந்தி 14 May 2022 6:24 PM IST (Updated: 14 May 2022 6:24 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தபாஞ்சான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமமான ஆனையப்பபுரம் கிராம பொதுமக்கள் ரேஷன் கடை கேட்டு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ஆனையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அரசு அனுமதி அளித்தது. இதற்கான திறப்பு விழா  நடைபெற்றது.

ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
விழாவில் ஒன்றிய கவுன்சிலர் பசுபதிதேவி, குத்தபாஞ்சான் பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி குமார், ஊர் நாட்டாண்மை சுப்பிரமணியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஆலங்குளம் நகர செயலாளர் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திராவிடமணி நன்றி கூறினார்.


Next Story