நாமக்கல்லில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
நாமக்கல்லில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
நாமக்கல்:
நாமக்கல்லில் ஆம்னி வேனில் கடத்தப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமை பொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல் குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், தனித்துணை தாசில்தார் ஆனந்தன், தனி வருவாய் ஆய்வாளர் சியாம் சுந்தர் மற்றும் போலீசார் நேற்று காலையில் நாமக்கல் மேட்டுத்தெரு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து 23 பிளாஸ்டிக் சாக்குகளில் கடத்தி வரப்பட்ட சுமார் 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.
டிரைவர் கைது
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பழனிபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள வாகனத்தின் உரிமையாளர் ராஜேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அவர் சிக்கினால் தான் ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story