சரத்பவார் குறித்து சர்ச்சை பதிவிட்ட பார்மசி மாணவர் கைது
சரத்பவார் குறித்து சர்ச்சை பதிவிட்ட பார்மசி மாணவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த 11-ந் தேதி நிக்கில் பாம்ரே என்ற வாலிபர் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் அவர், ‘பாராமதியின் காந்திக்காக, பாராமதியின் கோட்சேவை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது' என கூறியிருந்தார்.
இந்த பதிவு தொடர்பாக மந்திரி ஜித்தேந்திர அவாத் டுவிட்டரில் மாநில போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து இருந்தார். மேலும் தானே நவ்பாடா போலீஸ் நிலையத்திலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்து இருந்தனர்.
இந்தநிலையில் சரத்பவார் குறித்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவை போட்ட நாசிக், தின்டோரி பகுதியை சேர்ந்த பார்மசி மாணவர் நிக்கில் பாம்ரேயை (வயது21) போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர் வலதுசாரி இயக்கத்தை சேர்ந்தவர் என போலீசார் கூறியுள்ளனர். இதேபோல மாணவர் போலீசார் அவரை தேடுவதை தெரிந்தவுடன் சமூக வலைதள கணக்குகள் அனைத்தையும் அழித்துவிட்டதாகவும், அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இதற்கு முன்பும் மாணவர் அரசியல் தலைவர்கள் குறித்து சர்ச்சை பதிவுகளை போட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story