சார் பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு


சார் பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 14 May 2022 6:36 PM IST (Updated: 14 May 2022 6:36 PM IST)
t-max-icont-min-icon

சிவகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகிரி:

சிவகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்தனர்.

அங்கு பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story