திருச்செந்தூர் அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி
திருச்செந்தூர் அருகே ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே, ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
சாமி கும்பிட...
நெல்லை மாவட்டம் தாழையூத்தை சேர்ந்தவர் முருகன் மகன் வலதி மாயாண்டி (வயது 24). இவர் தனது தாயார் சுப்புலட்சுமி (48), தனது அக்காளின் ஒரு வயது குழந்தை பேச்சிதன்சிகாவையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார்.
திருச்செந்தூர் அருகே நெல்லை ரோட்டில் உள்ள குமாரபுரம் வந்தபோது எதிரே, வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சிநகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது.
பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் கீழே விழுந்தனர். சுப்புலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைக்கு இரண்டு கால்கள் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்க சுப்புலட்சுமியை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுப்புலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி மாயாண்டி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story