விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2022 7:30 PM IST (Updated: 14 May 2022 7:30 PM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள எட்டி சேரி கிராமத்தை சேர்ந்த உடையார் மகன் கோவிந்தன் (வயது 51). இவருக்கு ஜெயமினி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் கோவிந்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி ஜெயமணியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் விரக்திஅடைந்த கோவிந்தன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து அருந்தி உள்ளார். இதில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story