தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
போக்குவரத்துக்கு இடையூறு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு மேலகலுங்கடி காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்த வருகிறார்கள். இங்கு பொதுமக்கள் செல்லும் சாலையின் நடுவில் ஒரு மின்கம்பம் நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த மின்கம்பத்தை சாலையோரம் மாற்றியமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.சதீஷ்பாபு, கலுங்கடி.
தாழ்வாக செல்லும் மின்கம்பி
இடைக்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட மஞ்சாலுமூட்டில் இருந்து மாலைக்கோடு செல்லும் சாலையில் ஒரு பஞ்சாயத்து கிணறு உள்ளது. இந்த கிணறு சற்று மேடான பகுதியில் அமைந்துள்ளது. கிணற்றையொட்டி செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், கிணற்றில் தண்ணீர் எடுக்க செல்லும் பொதுமக்கள் மீது மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாம்சன், மஞ்சாலுமூடு.
சாலை சீரமைக்கப்படுமா?
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சியில் கோனசேரி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஷ்ணு, மெதுகும்மல்.
வழிகாட்டும் பலகை வேண்டும்
புதுக்கடை - பரசேரி சாலையில் திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து முளகுமூடு செல்லும் சாலையில் கோழிப்போர்விளையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்ல புதுக்கடை - பரசேரி சாலையில் வரும் பொதுமக்கள் வழி தெரியாமல் திணறுகிறார்கள். ஆகவே திக்கணங்கோடு சந்திப்பு பகுதியில் வட்டார போக்குவரத்து அலுலகம் செல்லும் சாலையை அடையாளம் காட்டும் வகையில் வழிகாட்டும் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எட்வின், மத்திகோடு.
முடங்கி கிடக்கும் பணி
நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் சுங்கான்கடையில் குளத்தின் கரையில் சாலையை அகலப்படுத்தி தடுப்பு சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணி பல மாதங்களாக முடங்கி கிடக்கிறது. மேலும், அந்த பகுதியில் சாலை வலு இழந்து காணப்படுவதால் கனரக வாகனங்களில் செல்கிறவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, முடங்கி கிடக்கும் பணியை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-சேவியர், வில்லுக்குறி.
சாலையில் பள்ளம்
இரணியல் அருகே உள்ள செருப்பங்கோட்டில் இருந்து பேயன்குழி செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-மகேஷ், செருப்பங்கோடு.
Related Tags :
Next Story