திருமண மண்டபத்தில் ‘லிப்ட்’ அறுந்து பிளஸ்-1 மாணவர் பலி


திருமண மண்டபத்தில் ‘லிப்ட்’ அறுந்து பிளஸ்-1 மாணவர் பலி
x
தினத்தந்தி 14 May 2022 2:19 PM GMT (Updated: 2022-05-14T19:49:40+05:30)

திருமண மண்டபத்தில் ‘லிப்ட்’ கம்பி அறுந்து விழுந்த விபத்தில் பிளஸ்-1 மாணவர் தலை நசுங்கி பலியானார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. திருமண மண்டபத்தின் 2-வது மாடிக்கு ‘லிப்ட்’ மூலம் கேட்ரிங் பணியாளர்கள் உணவு பொருட்களை கொண்டு சென்றனர்.அந்த உணவு பொருட்களை 2-வது மாடியில் உள்ள ‘லிப்ட்’டில் இருந்து இறக்கி கொண்டிருந்தபோது, ‘லிப்ட்’டின் இரும்பு கம்பி திடீரென அறுந்து விபத்துக்குள்ளானது. இதில் ‘லிப்ட்’ அப்படியே கீழே விழுந்தது. ‘லிப்ட்’டில் இருந்து உணவு பொருட்களை இறக்கிய கேட்டரிங் பணியாளரான காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் சீத்தலின் (வயது 19) தலையின் மீது ‘லிப்ட்’டின் மேல் பகுதி வேகமாக மோதியதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் ‘லிப்ட்’டில் சென்ற சக பணியாளர்களான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன் (23), விக்னேஷ் (21) ஆகியோர் கால் முறிவு ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story