பொள்ளாச்சி நகராட்சி தூய்மை குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது
பொள்ளாச்சி நகராட்சி தூய்மை குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் நாச்சிமுத்து பிரசவ விடுதியில் நடைபெற்றது. முகாமை நகராட்சி தலைவர் சியாமளா தொடங்கி வைத்தார்.
முகாமில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, நகர்நல அலுவ லர் டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், ஆறுமுகம், ஜெயபாரதி, செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.
அவர்கள், முகாமில் கலந்து கொண்டவர்களின் ரத்த மாதிரி களை கொண்டு சர்க்கரையின் அளவு பரிசோதனை செய்தனர்.
இதை தவிர ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் காது, மூக்கு, தொண்டை மற்றும் பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட் டது.
இதில் பாதிப்பு உள்ளவர்களுக்கு சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் 325 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story