டிப்பர் லாரி மோதி விவசாயி பலி


டிப்பர் லாரி மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 14 May 2022 8:30 PM IST (Updated: 14 May 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி விவசாயி பலியானார்.

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே உள்ள ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் குப்பமுத்து (வயது 47). விவசாயி. அவருடைய மகன்கள் யுவராஜ் (15), மனோஜ் (11). குப்பமுத்து, தனது மகன்களுடன் சீலையம்பட்டியில் உள்ள தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றார். 

அப்போது அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று விட்டு, மீண்டும் சின்னமனூர்-தேனி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்தவழியாக கம்பம் நோக்கி சென்ற டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குப்பமுத்து உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

பின்னர் அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்பமுத்து பரிதாபமாக இறந்தார். 

அவரது 2 மகன்களுக்கும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் பாண்டியன் (35) என்பவரை கைது செய்தனர்.

Next Story