சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2022 3:15 PM GMT (Updated: 2022-05-14T20:45:41+05:30)

சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் விரக்தி அடைந்த 6-ம் வகுப்பு மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த சின்னகோலடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் ஜனனி (வயது 11). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஜனனி, சரிவர படிக்காமல் வரைபடம் வரைந்து கொண்டிருந்ததாகவும், இதனால் அவரது தாய் சரண்யா, சரியாக படிக்காமல் இப்படி வரைபடம் வரைந்து கொண்டிருக்கிறாயே? என திட்டியதாகவும் தெரிகிறது.

இதில் மனமுடைந்த ஜனனி, வீட்டில் தாயின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை காப்பாற்றி, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஜனனி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் சென்னை மயிலாப்பூர் விசாலட்சுமி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்தன். இவருடைய மகள் ஹேமாவதி (வயது 17). அதே பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த மாணவி ஹேமாவதி, கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர், வீடு திரும்பி வந்தபோது தங்கள் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அபிராமபுரம் போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்ெகாலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story