தக்காளி வைரஸ் குறித்து வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அறிவுரை
தக்காளி வைரஸ் குறித்து வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
குன்னூர்
தக்காளி வைரஸ் குறித்து வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
அதிநவீன புனரமைப்பு
குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் அறக்கட்டளையின் சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் புற நோயாளிகள் பிரிவு அதிநவீனமாக புனரமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி புற நோயாளிகள் பிரிவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வார்டுகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில், தன்னார்வ அமைப்பினர் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுய பாதுகாப்பு கட்டாயம்
ஊட்டி மலர் கண்காட்சியின் போது சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் தங்களின் சுய பாதுகாப்பை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ெ20 பேருக்கு மேல் கூடும் இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொள்வது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும். தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்
பழங்குடியினருக்கு வரும் சிக்கில் செல் அனீமியா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இது போன்ற மரபுவழி வரும் நோய்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உறவுமுறையில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும். மரபு வழி இல்லாதவர்களுக்கு பரிசோதனை மூலம் வராமல் தடுக்கலாம் தக்காளி வைரஸ் காய்ச்சல் குறித்து பயப்பட தேவையில்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். யாருக்காவது உடல் நிலை பாதிப்ப ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடம் காண்பித்தாலே என்ன காய்ச்சல என்பது தெரிந்த விடும் குன்னூர் அரசு ஆஸ்பத்திரி மேம்பாட்டிற்கு தமிழக முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறி ரூ.5 கோடி நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதே போல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story