ஊட்டியில் மலர் கண்காட்சி: வருகிற 20- ந் தேதி உள்ளூர் விடுமுறை
ஊட்டியில் மலர் கண்காட்சி வருகிற 20-ந் தேதி உள்ளூர் விடுமுறை
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 124-வது மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேலும், 20-ந் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) அன்று நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாக இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story