சாமளாபுரத்தில் ரூ31 லட்சத்தில் துணை சுகாதார நிலையம்


சாமளாபுரத்தில் ரூ31 லட்சத்தில்  துணை சுகாதார நிலையம்
x
தினத்தந்தி 14 May 2022 9:07 PM IST (Updated: 14 May 2022 9:07 PM IST)
t-max-icont-min-icon

சாமளாபுரத்தில் ரூ31 லட்சத்தில் துணை சுகாதார நிலையம்

மங்கலம்:
சாமளாபுரம் பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.  சாமளாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 10 கிலோ மீட்டர்   தொலைவில் உள்ள பூமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று காய்ச்சல், சளி, கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை, பிரசவம் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால  சாமளாபுரம் பகுதியில் அரசு ஆரம்ப  சுகாதார நிலையம்  அல்லது துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு கொடுத்தனர். 
இந்த நிலையில்  சாமளாபுரம் பேரூராட்சி பள்ளபாளையம் பகுதியில் உள்ள சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகம் அருகே துணைஆரம்ப சுகாதார நிலையம் ரூ.31 லட்சத்தில் கட்டப்பட உள்ளது.  இந்த இடத்தை பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, பூமலூர்  அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் சாந்தகுமாரி, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணை தலைவர் குட்டி வரதராஜன், பூமலூர்  சுகாதார ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர்  பார்வையிட்டனர்.

Next Story