திருவாரூரில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
திருவாரூரில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவாரூர்:-
திருவாரூரில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தெற்கு வீதி பெயர் மாற்றம்
திருவாரூர் நகரசபையின் முதல் கூட்டம் கடந்த மாதம்(ஏப்ரல்) 11-ந் தேதி நடந்தது. இதில் திருவாரூர் தெற்கு வீதிக்கு ‘டாக்டர் கலைஞர் சாலை’ என பெயர் மாற்றம் செய்வது உள்பட 45-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவாரூர் தெற்கு வீதியின் பெயரை மாற்றுவதற்கு பா.ஜனதா உள்பட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் திருவாரூர் தெற்கு வீதியின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், நகராட்சி ஆணையரிடமும் மனு அளித்தனர்.
அண்ணாமலை மீது வழக்கு
இந்த நிலையில் திருவாரூர் தெற்கு வீதி பெயர் மாற்றத்தை கண்டித்து பா.ஜனதா சார்பில் கடந்த 12-ந் தேதி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பாஸ்கர், நகர தலைவர் சங்கர், நகர செயலாளர் கணேசன் மற்றும் பலர் மீது திருவாரூர் டவுன் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, பொது வழிப்பாதையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story