ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு அனுதாபம் கூடலூரில் கோடை விழா கலை நிகழ்ச்சிகள் ரத்து

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு அனுதாபம் கூடலூரில் கோடை விழா கலை நிகழ்ச்சிகள் ரத்து
x
தினத்தந்தி 14 May 2022 9:12 PM IST (Updated: 14 May 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவையொட்டி அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் கூடலூரில் கோடை விழா கலை நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து கோடை விழாவை நாளை வரை நீட்டித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கூடலூர்

கலை நிகழ்ச்சிகள் ரத்து

கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்கியது. தனியார் பள்ளிக்கூட மைதானம் என்பதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கோடை விழா கலை நிகழ்ச்சிகள் மாலை 3 மணிக்கு மேல் நடத்தப்பட்டது. தொடர்ந்து இரவு 11 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 2-வது நாளாக வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழாவை காண ஏராளமான மக்கள் காலை முதல் வருகை தந்தனர். தொடர்ந்து கண்காட்சி அரங்குகளை கண்டு ரசித்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான கலைஞர்கள் வந்திருந்தனர். இந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா சயீத் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கோடை விழா கலை நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்வதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

நீட்டிப்பு

இதனால் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவ-மாணவிகள் மற்றும் நடன கலைஞர்கள் மட்டுமின்றி கோடை விழாவுக்கு வந்த பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கலை நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்கள், அமைப்பினர் அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கலை நிகழ்ச்சிகள் தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று நாளை (திங்கட்கிழமை) வரை கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story