கார்-மொபட் மோதல்; பெண் பலி


கார்-மொபட் மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 14 May 2022 9:39 PM IST (Updated: 14 May 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் கார்-மொபட் மோதியதில் பெண் பலியானார்.

தென்காசி:

தென்காசி மங்கம்மா சாலை குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த ரெங்கன் மனைவி செல்வி (வயது 55). இவர் தனது மொபட்டில் அதே பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் செல்வி பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து ஆய்க்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த டிரைவர் நாசரேத்தை சேர்ந்த குமாரசாமி மகன் செல்வகுமாரை தேடி வருகிறார்.


Next Story