தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
குளம் தூர்வாரப்படுமா?
ஆண்டிப்பட்டி தாலுகா மரிக்குண்டு ஊராட்சி சுப்புலாபுரத்தில் உள்ள குளம் கழிவுநீர் தேங்கியும், ஆகாய தாமரை படர்ந்தும் காணப்படுகிறது. எனவே குளத்தை தூர்வாரி ஆகாய தாமரையை அகற்ற வேண்டும். மேலும் குளத்தில் கழிவுநீர் தேங்காமல் தடுக்க வேண்டும். -நந்தகோபால், ஆண்டிப்பட்டி.
தூர்வாராத சாக்கடை கால்வாய்
திண்டுக்கல் மாநகராட்சி பேகம்பூரில் கவுண்டர்சத்திரம் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். -யாசர்அராபத், திண்டுக்கல்.
குளத்தில் கலக்கும் கழிவுநீர்
நிலக்கோட்டை தாலுகா முசுவனூத்து ஊராட்சி கல்கோட்டை குளத்தில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் குளம் மாசடைவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. எனவே குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.-ஹரிஹரபாண்டியன், நிலக்கோட்டை.
சாக்கடை கால்வாய் பாலம் சேதம்
திண்டுக்கல் ஒன்றியம் தோட்டனூத்து ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டி தெற்கு தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் பாலம் சேதம் அடைந்துவிட்டது. அந்த பாலத்தின் நடுவே பெரிய பள்ளம் உருவாகி இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விபத்து நடைபெறாமல் தடுக்க உடனடியாக புதிய பாலம் கட்ட வேண்டும். -ஜோசப், நல்லமநாயக்கன்பட்டி.
Related Tags :
Next Story