வாலிபருக்கு அரிவாள் வெட்டு
ஆலங்குளம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர்
ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரிய மருதையா மகன் மதன்குமார் (வயது 26). இவர் தெற்குப்பட்டி கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
மதன்குமாருக்கும் அவரது உறவினரான சிவலார்குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சடையாண்டி என்ற சண்முகசுந்தரம் (67) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.
அரிவாள் வெட்டு
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு காமாட்சி அம்மன் கோவில் அருகில் மதன்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சண்முகசுந்தரத்தின் மகன் சரவணகுமார் (37) என்பவர் வந்தார். அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதையடுத்து சரவணகுமார் (37), அவரது தந்தை சண்முகசுந்தரம் மற்றும் உறவினர் கொக்கிகுமார் (27) ஆகியோர் சேர்ந்து மதன்குமாரை தாக்கியதாகவும், இதில் அவரது கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
3 போ் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதன்குமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமார், கொக்கி குமார், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story