கோவை டெல்லி சரக்கு ரெயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது. இதற்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
கோவை டெல்லி சரக்கு ரெயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது இதற்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
கோவை
கோவை-டெல்லி சரக்கு ரெயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது. இதற்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சரக்கு ரெயில்
கோவை வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லி படேல் நகருக்கு ஒப்பந்த அடிப்படையில், தனியாா் நிறுவனம் மூலமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் சரக்கு விரைவு ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது.
இதில் முகக்கவசங்கள், துணிகள், மருந்துகள், காய்கறி, பழங்கள் அதிக அளவில் கொண்டுசெல்லப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா நோய்தொற்று காரணமாக சில மாதங்களாக இந்த ரெயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டது.
மீண்டும் இயக்கம்
இதைத்தொடா்ந்து, இந்த சரக்கு ரெயிலை இயக்கி வந்த நிறுவனத்துடன் ரெயில்வே நிா்வாகம் ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தம் நிறைவடைந்தது.
இந்தநிலையில் வேறு நிறுவனம் மூலமாக வடகோவை - புதுடெல்லி சரக்கு விரைவு ரெயிலானது, ஒப்பந்த அடிப்படையில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
15 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு ரெயில் சேவையை, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளா் கவுதம் ஸ்ரீனிவாஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மாதம் 2 முறை இயக்கப்படும் இந்த ரெயிலானது சனிக்கிழமை காலை 10 மணிக்கு வடகோவை ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, திருப்பூா், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, நாகபுரி வழித்தடத்தில் புதுடெல்லியை திங்கட்கிழமை இரவு சென்றடையும்.
அங்கிருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்டு நாகபுரி, ரேணிகுண்டா, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு வடகோவை ரெயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரெயிலுக்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story