உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்


உடுப்பி கிருஷ்ணன் கோவிலில்  நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 May 2022 10:02 PM IST (Updated: 14 May 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலும் அவர் வழிபட்டார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலும் அவர் வழிபட்டார்.


மங்களூரு:

நிர்மலா சீதாராமன்

  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் டெல்லியில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பா.ஜனதாவினர் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் மங்களூருவில் தங்கினார்.

  ,இன்று காலையில் அவர் மங்களூருவில் இருந்து கார் மூலம் உடுப்பிக்கு சென்றார். உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சாமி தரிசனம்

  பின்னர் சிறப்பு பூஜைகளும் நடந்தன. பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் தலைமை அர்ச்சகர் வித்யாசாகர் தீர்த்த சாமிஜி, நிர்லமா சீதாராமனுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினார். மேலும் ஆசியும் வழங்கினார். அதையடுத்து அவர் பைந்தூர் தாலுகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். அங்கும் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

  அவரை கோவில் தலைமை அர்ச்சகர் கோவிந்தா அடிகா மற்றும் நரசிம்ம அடிகா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நிர்மலா சீதாராமன் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். இந்த சந்தர்ப்பத்தில் நிர்மலா சீதாராமனுடன், மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே, சுகுமார் ஷெட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story