சங்கராபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி.தேர்வுக்கான இலவச பயிற்சி
சங்கராபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி.தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4 தேர்விற்கான இலவச பயிற்சியை தொடங்கியது. இதற்கு தாசில்தார் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு துறை இளநிலை அலுவலர் செங்கதிர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவா் பேசுகையில், சங்கராபுரம் தாலுகாவில் உள்ள கிராமப்புறங்களில் விவசாயத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதனால் கல்வியறிவு குறைவாக உள்ளதால் போட்டி தேர்வு எழுதுவதற்கான விழிப்புணர்வு இல்லை. ஆகவே இந்த பயிற்சியில் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெறுவதுடன், போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பு பெற்றிட வேண்டும் என்றார். இதில் சென்னை பி.எல்.ராஜ் அகாடமி பயிற்சியாளர் மலர்மன்னன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் திருமலை, அண்ணாமலை கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் மற்றும் சங்கராபுரம் வட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
Related Tags :
Next Story