உக்கடம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது


உக்கடம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது
x
தினத்தந்தி 14 May 2022 10:11 PM IST (Updated: 14 May 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

உக்கடம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது

கோவை

கோவை உக்கடம் சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது 21). இவர் பேரூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 

இந்த நிலையில் அவர்  உக்கடம் பஸ் நிலையத்தில் தனது தோழியுடன் நின்று கொண்டு இருந்தார். 

அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய ஒருவருக்கும், நிர்மல்குமாருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிர்மல்குமாரின் முகம் உள்பட பல இடங்களில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நிர்மல்குமார் மாணவி ஒருவருடன் பழகி வந்ததால் அதை கைவிடுமாறு வாலிபர் கூறி உள்ளார். 

ஆனால் நிர்மல்குமார் அந்த மாணவியுடன் பழகுவதை கைவிடாமல் தொடர்ந்து அவருடன் பேசி வந்ததால் அந்த வாலிபர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story