சோளிங்கரில் அனைத்து வார்டுகளிலும் வாரம் ஒருமுறை ஒட்டுமொத்த துப்புரவுப்பணி


சோளிங்கரில் அனைத்து வார்டுகளிலும் வாரம் ஒருமுறை ஒட்டுமொத்த துப்புரவுப்பணி
x
தினத்தந்தி 14 May 2022 10:29 PM IST (Updated: 14 May 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் வாரம் ஒருமுறை ஒட்டுமொத்த துப்புரவுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகரமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் வாரம் ஒருமுறை ஒட்டுமொத்த துப்புரவுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகரமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நகர்மன்ற கூட்டம்

சோளிங்கர் நகரமன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனி, நகராட்சி ஆணையாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், ‘‘சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் வசதி, தண்ணீர் வசதியும் ஏற்படுத்த வேண்டும். சோளிங்கர் நகராட்சியில் 31 திருமண மண்டபங்கள் உள்ளன. ஆனால் 8 திருமண மண்டபங்கள் தான் அனுமதி பெற்று இயங்குகின்றன. மற்ற 23 இடங்கள் குடோன் என அனுமதி பெற்று திருமண மண்டபங்களாக நடத்தி வரப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது. எனவே அனைத்து திருமண மண்டபங்களிலும் முறையாக ஆய்வு செய்து உரிய வரியை வசூல் செய்தால் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். 

குடிநீர் பற்றாக்குறை உள்ள வார்டுகளில் பிரச்சினையை தீர்க்க வேண்டும். தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஒருவழிசாலை முறை செயல்படுத்த வேண்டும்’’் என வலியுறுத்தினர்.

மேலும் நகராட்சியில் பொதுமக்கள் அதிக அளவில் கூட கூடிய பஸ் நிலையம், மார்க்கெட், வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் கட்டண விவரங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை மீது சுங்கவரி எவ்வளவு என்ற விவரத்தை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் கோபால் கோரிக்கை வைத்தார்.

துப்புரவுப்பணி

அதனை தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் ‘‘நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வாரம் ஒருமுறை ‘மாஸ் கிளீனிங்’ எனப்படும் ஒட்டுமொத்த துப்புரவுப்பணி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. சோளிங்கர் நகராட்சி பகுதியில் திருட்டு சம்பவங்களை தவிர்க்கும் வகையில் நகராட்சி உட்பட்ட 27 வார்டுகளில் முக்கிய 120 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படுகிறது’’ என்றனர்.
கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர்கள் எபினேசன், ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
=============

Next Story