2 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம்- காட்பாடி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து 23-ந் தேதி தொடங்குகிறது
2 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம்- காட்பாடி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து 23-ந் தேதி தொடங்குகிறது.
விழுப்புரம்,
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சில பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்கனவே நிறுத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காட்பாடி- விழுப்புரம் பயணிகள் ரெயிலை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்க தென்னக ரெயில்வே அனுமதியளித்துள்ளது. அதன்படி இந்த ரெயில் போக்குவரத்து வருகிற 23-ந் தேதி முதல் தொடங்க உள்ளது.
அதன்படி அன்று காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு விழுப்புரத்திற்கு பயணிகள் ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயில் வேலூர் டவுன், வேலூர் கண்டோன்மெண்ட், பெண்ணாத்தூர், கணியம்பாடி,
கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதராம்பட்டு, ஆரணி சாலை, மாதிரிமங்கலம், போளூர், அகரம்சிப்பந்தி, துறிஞ்சாபுரம், திருவண்ணாமலை, தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் வழியாக விழுப்புரம் ரெயில் நிலையத்தை காலை 9.10 மணிக்கு வந்தடைகிறது.
இதேபோல் மறுமார்க்கத்தில் விழுப்புரத்தில் இருந்து இரவு 7.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் காட்பாடியை இரவு 11.05 மணிக்கு சென்றடைகிறது.
Related Tags :
Next Story