தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டம்


தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 15 May 2022 12:00 AM IST (Updated: 14 May 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

வெளிப்பாளையம்:
நாகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மதுரை மண்டல கவுரவ தலைவர் புவன ஆதீமூலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-
 சி, டி. வகுப்பு வாய்க்கால் தூர்வாருவதற்கு தமிழக வேளாண் துறை அனுமதி அளித்ததை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பி வகுப்பு பாசன வாய்க்காலை தூர்வாரினால் தான் பயனடைய முடியும். எனவே விவசாயிகள் நலன்கருதி அரசு, மறுபரிசீலனை செய்து, பி, சி, டி வகுப்பு வாய்க்கால்களை இணைத்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Next Story