கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தர்கா சந்தனக்குட ஊர்வலம்
கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தர்கா சந்தனக்குட ஊர்வலம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தர்காவில் அனைத்து ஜமாத்தார் முன்னிலையில் கொடியேற்றத்துடன் உரூஸ் திருவிழா தொடங்கியது. இதையொட்டி கிருஷ்ணகிரி அனைத்து ஜமாத்தார் தலைமையில் பிரமாண்டமான மலர் அலங்காரத்துடன் சந்தனக்குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை மக்கானில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சங்கல்தோப்பு தர்கா சென்றடைந்தது. அன்று இரவு தமிழ் இஸ்லாமிய பாடகர் திருச்சி யூசுப் இசைக் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. இந்த 2 நாட்களும் மதியம் 2 மணிக்கு தர்காவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களை சேர்ந்த ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story