கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செல்போன் செயலிக்கு அடிமையானவர்கள் மீட்பு மையம் தொடக்கம்


கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செல்போன் செயலிக்கு அடிமையானவர்கள் மீட்பு மையம் தொடக்கம்
x
தினத்தந்தி 14 May 2022 10:53 PM IST (Updated: 14 May 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செல்போன் செயலிக்கு அடிமையானவர்கள் மீட்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இணையதளம் மற்றும் செல்போன் செயலிகளுக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக இணையதள சார்புநிலை மீட்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இணையதள பயன்பாடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமெங்கும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2023-ல் இணையதளம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 66.64 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 22 சதவீதம் பேர் செல்போனுக்கு அடிமையாக உள்ளனர். கொரோனா காலத்தில் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. பலரும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகிறார்கள். மேலும் ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால் பதற்றமடைதல், பொருட்களை உடைத்தல், தூக்கம் இன்மை போன்றவை இணையதளத்திற்கு அடிமையானதற்கான அறிகுறிகள் ஆகும். இந்த இணையதள அடிமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருத்துவமனையில் சிறப்பு மனநல மருத்துவர்கள் மூலம் பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், 8300824104 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story