தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்-வேளாண்மை அதிகாரி அறிவுரை


தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்-வேளாண்மை அதிகாரி அறிவுரை
x
தினத்தந்தி 14 May 2022 10:53 PM IST (Updated: 14 May 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என வேளாண்மை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கிருஷ்ணகிரி அணையின் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் நெல் நடவு செய்ய நாற்றங்கால் தயார் செய்யும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, விதை விற்பனையாளர்கள் தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும். மேலும், விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதை குவியல்களின் தரமறிந்து விற்பனை செய்ய வேண்டும். விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டியல்களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வறிக்கையையும் கேட்டு விவசாயிகள் சரிபார்க்க வேண்டும். விதை குவியல்களின் தரமறிந்து நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story