அர்ச்சகர் வீட்டில் திருட்டு


அர்ச்சகர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 14 May 2022 10:54 PM IST (Updated: 14 May 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

அர்ச்சகர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

ஊத்தங்கரை:
ஊத்தங்கரை பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10-ந் தேதி மணிகண்டன் தனது குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 1½ பவுன் நகை, வெள்ளி கொலுசு, வெள்ளி காசு, ரூ.2,500 ஆகியவை திருட்டு போய் இருந்தது. இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story