நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலம்பட்டி பழைய ஏரி மற்றும் வேங்கானூர் மாரியம்மன் குட்டை ஏரிகளில் நடைபெறும் திட்டப்பணிகளை பேரூராட்சி இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு வேலை செய்யும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதே போல வேலம்பட்டி சந்தை தோப்பு பகுதியில் இருந்து சந்தியப்பன் கொட்டாய் வரையில் புதிதாக போடப்பட்டு வரும் தார்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தர்மபுரி மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜன், பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, துணைத்தலைவர் குமார், செயல் அலுவலர் மதியழகன், இளநிலை உதவியாளர் மகேந்திரன், பேரூராட்சி தலைமை எழுத்தர் மணிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story