கழிவுநீர் கால்வாய் தூர்வாரும்பணி
சோளிங்கரில் பொதுமக்கள் கோரிக்கையின்பேரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
சோளிங்கர்
சோளிங்கரில் பொதுமக்கள் கோரிக்கையின்பேரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பாதையிலேயே தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. கால்வாய்களை முழுமையாக தூர்வாரி கழிவுநீர் வெளியே செல்ல வழிவகுக்க வேண்டும் என கவுன்சிலர் ஆஞ்சநேயனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அது குறித்து நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி தலைவர் தமிழ்செல்வி ஆகியோரிடம் கவுன்சிலர் முறையீடு செய்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று பில்லாஞ்சி சோமசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ள பெரிய கால்வாயை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. இந்த பணிகள் முழுமையாக செய்து முடித்து கழிவுநீர் முறையாக வழிவகை செய்ய வேண்டும் எனவும், இந்த பகுதியில் மின் விளக்குகள் அமைத்து குடிநீர் சீராக வழங்க ஏற்பாடு செய்து வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story