அய்யனார்-தொட்டியத்தான் கோவில் தேரோட்டம்
அய்யனார்-தொட்டியத்தான் கோவில் தேரோட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கல்பாடி கிராமத்தில் அய்யனார், பூரணி, புஷ்கலை, மண்டபத்து முத்துசாமி, தொட்டியத்தான் சுவாமி, புதுகருப்பனார் சுவாமி ஆகிய சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு வெட்டு குதிரையில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7 மணியளவில் அய்யனார், தொட்டியத்தான் சுவாமி உள்ளிட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். இதையடுத்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பின்னர் தேரோடும் வீதிகளின் வழியாக சென்ற தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தின்போது விசேஷ படுகள விளையாட்டுகளும், படுகளமும் நடத்தப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சுவாமி மஞ்சள் நீராட்டு விழாவும், மதியம் 2 மணியளவில் காப்பு அவிழ்ப்பு விழாவும் நடைபெறுகிறது. இரவில் சுவாமி புறப்பாட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story