இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுடன் போலீ்ஸ் சூப்பிரண்டு ஆலோசனை கூட்டம்


இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுடன் போலீ்ஸ் சூப்பிரண்டு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 14 May 2022 11:43 PM IST (Updated: 14 May 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் கோட்ட போலீஸ் இன்ஸ்பொக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்.

அரக்கோணம்

அரக்கோணம் கோட்ட போலீஸ் இன்ஸ்பொக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்.


அரக்கோணம் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கலந்து கொண்டு பொது மக்களிடம் புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், போலீஸ் நிலையத்தில் ஆவணங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் விளக்கியதோடு குற்றவாளிகளை கைது செய்யும்போது நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும். 

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதற்கு ஏற்ப செல்பட வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில்  துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் அரக்கோணம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story