ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 13 பவுன் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 13 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 14 May 2022 11:59 PM IST (Updated: 14 May 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

உறவினர் வீட்டு திருமணத்துக்கு வந்த போது ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 13 பவுன் நகை திருடப்பட்டது.

விருதுநகர்,

உறவினர் வீட்டு திருமணத்துக்கு வந்த போது ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 13 பவுன் நகை திருடப்பட்டது. 

உறவினர் வீட்டு திருமணத்துக்கு...

சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர் ராமபிரியா (வயது 28). இவர் திருப்பரங்குன்றத்தில் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக தனது 13 பவுன் நகைகள் இருந்த நகைப்பெட்டியை டிராவல் பேக்கில் வைத்து பையை பூட்டாமல் எடுத்துக்கொண்டு சிவகாசியில் இருந்து திருப்பூர் செல்லும் பஸ்சில் ஏறினார். இவருடன் இவரது மாமியாரும் பயணம் செய்தார்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில ்இவர்களது இருக்கைக்கு அருகில் 35 வயது மதிக்கத்தக்க பெண் கைக்குழந்தையுடனும், 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்ணும் நின்று கொண்டிருந்தனர். அப்போது ராமபிரியாவின் மாமியார் 35 வயது பெண்ணின் கைக்குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டார்.

நகை திருட்டு

இந்நிலையில் திருமங்கலத்தில் இறங்கி வேறொரு டவுன் பஸ்சில் ஏறி திருப்பரங்குன்றம் உறவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது பையில் இருந்த நகைப்பெட்டியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமபிரியா இதுபற்றி விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார்.
தனது புகாரில் பஸ்சில் தனது இருக்கையின் அருகில் நின்று கொண்டு பயணம் செய்த 2 பெண்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். 
இது பற்றி விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story