அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 May 2022 12:03 AM IST (Updated: 15 May 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சீர்காழி:
சீர்காழி ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 
16 விரைவு ரெயில்கள் நிற்பதில்லை
சீர்காழி ரெயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மையான விரைவு ரெயில்கள் நின்று சென்றன. இது சீர்காழி பகுதி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீர்காழி ெரயில் நிலையத்தில் இரண்டு விரைவு ரெயில்கள் மட்டுமே நின்று சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி வருகிறது. இந்த ரெயில் பாதை வழியாக செல்லும் 16 விரைவு ரெயில்கள் சீர்காழி ரெயில் நிலையத்தில் நின்று செல்லாததால் சீர்காழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். 
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் சீர்காழி ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்லக்கோரி ெரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் நேற்று சீர்காழி ெரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் முஸ்தபா, பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகி மார்க்ஸ் பிரியன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு சீர்காழி ெரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி பேசினர். 
போராட்டம் அறிவிப்பு
சீர்காழி ரெயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற 18 விரைவு ரெயில்களும் மீண்டும் நின்று செல்ல வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சியினர், வக்கீல் சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள்  உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story