வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்; கணவர் மாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பெண் பிணமாக கிடந்தார். அவரது கணவர் மாயமானார். பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
"
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பெண் பிணமாக கிடந்தார். அவரது கணவர் மாயமானார். பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டுக்குள் இறந்து கிடந்த பெண்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் ராஜீவ் காலனி உள்ளது. அங்கு கடந்த 5 மாதமாக லட்சுமணன் என்பவரும், அவரது மனைவி காளீஸ்வரி (வயது 45) என்பவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் காளீஸ்வரி வீட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் உடலில் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் லட்சுமணன் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் காளீஸ்வரி பிணமாக கிடந்தார்.
கொலையா?
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரணை நடத்திய போது நேற்றுமுன்தினத்தில் இருந்து காளீஸ்வரியின் கணவர் லட்சுமணனை காணவில்லை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காளீஸ்வரி எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? கணவர் லட்சுமணன் எங்கே சென்றார்? என கிருஷ்ணன்கோவில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் காளீஸ்வரி இறந்து கிடந்தது கிருஷ்ணன்கோவில் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story