கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்
கலை இலக்கிய பெருமன்ற கூட்டம் நடந்தது.
சிவகங்கை,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சிவகங்கை மாவட்ட சிறப்புப் பேரவை கூட்டம் சிவகங்கையில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கெளரவத் தலைவர்.கண்ணப்பன் வரவேற்று பேசினார்.மாவட்டச் செயலாளர். முருகன் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில்மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர்.காமராசு, மாவட்ட வழிகாட்டுக் குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், சிவகங்கை தமிழ்ச் சங்க தலைவர்.ஜவஹர், அரிமா சங்கத் தலைவர் முத்துராசு, மற்றும் சங்க உறுப் பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சிவகங்கைக் கிளையின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்ட வர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக.சுந்தர மாணிக்கம், செயலராக யுவராஜ் மற்றும் பொருளாளராக நாகலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.சாத்தூரில் மே மாதம் 20, 21,22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. முடிவில். சிவகங்கை கிளைச் செயலாளர் யுவராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story