வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 61). இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். ஜெயச்சந்திரன் தனது குடும்பத்துடன் திருச்சி சென்று விட்டு மறுநாள் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், அதில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story