இலுப்பூரில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
அன்னவாசல்:
இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாசில்தார் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ் முன்னிலை வகித்தார். இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ள வேண்டி 20 மனுக்கள் பெறப்பட்டு 19 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 1 மனு மேல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தனி வருவாய் ஆய்வாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story