வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பத்தூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் தாலுகா திம்மனாமத்தூர் ஊராட்சி குறுகப்பள்ளி பகுதியில் வசிப்பவர் முருகம்மாள் என்கிற வரலட்சுமி. இவரது மகன் பாரிவள்ளல் (வயது 23), டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஆங்காங்கே சிறு வேலைகளை செய்து வந்தார். எனினும் நிரந்தரமான அரசு வேலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார்.
இதனை தன்னுடைய நண்பர்களிடமும் மற்றும் தாயாரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட பாரிவள்ளல் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story