ஆபத்தான பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றம்


ஆபத்தான பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 15 May 2022 12:30 AM IST (Updated: 15 May 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடியில் ஆபத்தான பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு உள்ளன.

காரியாபட்டி, 

நரிக்குடி பஸ் நிலையம் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்குள்ள 2 கட்டிடங்கள் இடிந்து விழுகின்ற நிலையில் இருந்து வந்தது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகுந்த அச்சத்துடனே இருந்து வந்தனர். ஆபத்தான இந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடு்தனர். 
இதை தொடர்ந்து தற்போது மாணவர்களுக்கு கோ டை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ஆபத்தான கட்டிடங்களை இடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Next Story